வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

-திருவள்ளுவர் -

Skypeல் தொடர்பு கொள்ளமுடியும்

அறிவாற்றல் சிகிச்சை

நான் எல்லாவிதமான மன நோய்களையும், போதை பழக்கம், சூதாட்டம், தன் நம்பிக்கையின்மை உற்பட எல்லாவற்றுக்கும் எண்ண நிலையில் மாற்றம் கொண்டுவந்து குணப்படுத்துவதோடு, எப்படி குடும்பபிரச்சனைகளை தீர்பது என்றும் ஆலோசனை கூறி வருகின்றேன்.

அறிவாற்றல் சிகிச்சை மனோவைத்தியமுறை நோர்வேயிலும், உலக நாடுகளிலும் மிகவும் வேண்டிக்கொள்கின்ற வைத்தியமுறை. இது மிகவும் விஞ்ஞானரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது. பல அரசினர், தனியார் மனோ வைத்தியர்களால் உபயோகிக்கபடுகின்ற வைத்தியமுறை.

அறிவாற்றல் சிகிச்சை மருத்துவமுறையானது பிரச்சனை மற்றும் இப்போதைய நிலையை நோக்கியது. வழமையாக ஒருவரை குணப்படுத்த 10 - 20 மணித்தியலாங்கள் எடுக்கும், ஆனால் ஒருவரின் பிரச்சனையும், அறிகுறியும் மருத்துவ நேரத்தை மேலும் தீர்மானிக்கும். ஒருவரின் தீயஅடிப்படை எண்ணத்தில் நல்மாற்றத்தை கொண்டு வருவதற்காண மருத்துவ நேரம் கூடதலாக இருக்கும்.

 

ஒருவர் தனது அடிப்பட எண்ணத்திலிருந்தே அவர் தன்னை பற்றியும், உலகத்தை பற்றியும், தனது எதிர் காலத்தைபற்றியும் எண்ணுகின்றார்.

இந்த அடிப்பட எண்ணம் ஒருவரின் குழந்தை நிலையிருந்து உருவாக்கப்படுகின்றது. இந்த அடிப்பட எண்ணம் அவருடன் கூடபிறந்ததாகவோ அல்லது வளர்ந்த சூழ்நிலையின் காரணமாகவோ அல்லது இரண்டு நிலையின் காரணமாகவோ உருவாக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு காரணத்தால் உடனடியாக தோன்றுகின்ற தீயஎண்ணம் எம்மிடம் தீயஉணர்சிகளை உண்டாக்குவதோடு , தீயசெயல்களையும் செய்ய வைப்பதுடன் மீண்டும் பல புதிய தீயஎண்ணங்களையும் உருவாக்குவதலால் நாம் ஒரு தீய வட்டத்துக்குள் போய்விடுகின்றோம்.

உடனடியாக தோன்றும் தீய எண்ணங்களுக்கு உதாரணம்: " எல்லாம் எனது பிழை", " ஒருவரும் என்னைபற்றி எண்ணுவதில்லை", " இப்ப எனக்கு இதயஅடைப்புநோய் வந்துவிட்டது", "மற்றவர்கள் என்னை ஏமாற்ற பார்க்கின்றார்கள்", "மற்றவர்களால்தான் நான் குடிக்கிறேன்".

அறிவாற்றல் சிகிச்சை மனோவைத்தியத்தின் நோக்கம் எதிர்காலத்தில் தனே தனக்குமனோவைத்தியம் செய்வதுடன், தனே தனக்கு முதலாளியாவது.

தொடர்புகொள்ள இங்கே அழுத்தவும்

(ஏகாம்பரம் கேதீஸ்வரன்)

கண்ணன்

அனுபவம்

நான் 23 வருடங்களாக அரசினர் மனநோயாளர் மருத்துவ மனையில் வேலை செய்து வருவதோடு, எனக்கு மனநோய்யாளர்களை தனியாகவும், பல மனநோய்யாளர்களை ஒன்றாக சேர்த்து வைத்தியம் செய்த அனுபவமும் உண்டு. இதை தவிர மனநோயாளர்காளை குணப்படுத்துவோர்களுக்கு படிபிப்பதோடு ஆலோசனையும் கூறி வருகின்றேன். நான் உயர்பள்ளியில் மனநோயாளர்காளை குணப்படுத்துவதற்காக படிப்போருக்கு விரிவுரையாளராக இருப்பதுடன் அவர்களின் பரீச்சை திருத்துவோரகவும் இருக்கின்றேன். நான் எப்படி மனநோயை எண்ணநிலையில் மாற்றத்தைகொண்டுவந்து குணப்படுத்த முடியும் என்று எழுதியும் உள்ளேன்.

Kannan.no © All Rights Reserved 2011